ருத்ராட்சங்கள் ஆய்வு செய்ய மூணாறு வந்த ரஷ்யப் பெண் !

மூணாறு அருகே உள்ள இடமலைகுடி வனப்பகுதியில்,   ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 
பெண், ருத்ராட்சங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.
ரஷ்யாயை சேர்ந்தவர்  மிலா, 25. இவருடன் 
இந்தியாவைச்  சேர்ந்த மாணவி ஒருவர்  மாஸ்கோவில்
பட்ட படிப்பு படித்த போது, ருத்ராட்சங்களின் தன்மை 
குறித்து கூறியுள்ளார். இதில் ஈர்க்கப்பட்ட மிலா, 
வாரணாசியில், பனாரஸ் இந்து பல்கலை  கழகத்தில் 
சேர்ந்து,
ருத்ராட்சங்களை குறித்து ஆய்வு நடத்தி 
வருகிறார்.  ருத்ராட்சங்கள், மேற்கு  தொடர்ச்சி மலைகளில் அபூர்வமாக காணப்படும்
 என்பதை தெரிந்து கொண்டார். பல்வேறு  பகுதிகளில் ஆய்வு நடத்திய  மிலா, 
மூணாறுக்கு வந்தார். இங்குள்ள மலை வாழ் மக்கள்  வசிக்கும்  அடர்ந்த வனப் பகுதியான 
இடமலை குடிக்கு, வனத்துறையினரின் சிறப்பு அனுமதியுடன் சென்றார்.  இவருக்கு 
உதவியாக, சுற்றுப்புற சூழல் ஆர்வலரான, மூணாறைச் சேர்ந்த, மோகன் உடன் சென்றார்.  
மூணாறில் இருந்து, 25 கி.மீ., தூரம் வாகனத்தில் சென்று, அங்கிருந்து, 16 கி.மீ., கரடு, 
முரடான பாதையில்  நடந்து, இடமலைக்குடியை  அடைந்தனர். இடமலைகுடிக்குச் சென்ற
 முதல் வெளிநாட்டு பெண் என்ற  அந்தஸ்தைப் பெற்ற மிலாவை, மலை வாழ் மக்கள்
 ஆச்சர்யத்துடன் பார்த்தனர். அங்குள்ள  வனங்களில், ருத்ராட்சம் இனத்தைச் சேர்ந்த, 
"பத்ராட்சம்' மரங்கள் உள்ளதை கண்டனர். பத்ராட்சங்களை சேகரித்து, மிலா ஆய்வு
 நடத்தினார்.

No comments:

Post a Comment