ஐக்கிய அரபு நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதம் விற்பனை...


வாஷிங்டன்: ஐக்கிய அரபு நாடுகளுடன், 34 லட்சம் டாலர் மதிப்பிலான ஆயுத வினியோக ஒப்பந்தத்தை, அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. ஈரான், அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் அதிகரித்து வரும் நிலையில், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா இடையிலான இந்த ஆயுத வினியோக ஒப்பந்தம், நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தம் 34 லட்சம் டாலர் மதிப்பிலான பல்வேறு ராணுவத் தளவாடங்களை, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு விற்கிறது. சமீபத்தில் தான், அமெரிக்கா, சவுதி அரேபியாவுடன், 3 கோடி டாலர் மதிப்பிலான ஆயுத வினியோக ஒப்பந்தத்தை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment