சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு காயங்கள் சீக்கிரம் ஆறாதது ஏன்?

Diabetic Wound Care Guidelines - Food Habits and Nutrition Guide in Tamil
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புண்களோ, காயங்களோ ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாமல் போவதற்கு என்ன காரணம்?
பொதுவாகவே சர்க்கரை வியாதிக்காரர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும் அதிக நாட்களாகவும் இருந்தால் நுண்ணிய, மெல்லிய, சிறிய, பெரிய என இரத்தக்குழாயில் பல விதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனால் நரம்புகள், சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புகள் பாதிப்படைகின்றன.

இதில் பெருமளவு பாதிக்கப்படுவது நரம்பு பகுதிகளே. தொடு உணர்வு, அழுத்துகின்ற உணர்வு, வெப்பமானது எது? குளிர்ச்சியானது எது? என அனைத்துவிதமான உணர்வுகளையும் நமக்கு உணரச் செய்யும் நரம்பு பகுதிகள் பாதிக்கப்படுவதால், சர்க்கரை வியாதிக்காரர்கள் உணர்விழந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இதனால் அனைத்துவிதமான உணர்வு பாதிப்புகளும் ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவேதான் டயாபடீஸ்காரர்களின் காலில் சிறிய கல்லோ, முள்ளோ குத்தி காயங்கள் ஏற்பட்டால் கூட வலியும் பாதிப்பும் உணர முடியாமல் போய் விடுகிறது. மேலும் இரத்தக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு கால் பாதங்களுக்குப் போதுமான இரத்தம் செல்லாமல் தடைபட்டு நிற்கும். இதனால்தான் சிறிய காயம் ஏற்பட்ட டயாபடீஸ்காரருக்கு அதிகளவு சர்க்கரை இரத்தத்தில் இருப்பதால் கிருமி தயக்கமின்றி உள்ளே நுழைந்து உடனடி தாக்குதலுக்கு ஆளாகின்றார்.
அதோடு, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து கொண்டே இருப்பதால் சிறிய காயம் ஏற்பட்டாலும்கூட கிருமிகளின் பாதிப்பு அதிகமாகி காயத்தையும் சீக்கிரம் ஆறவிடாமல் செய்து விடுகிறது. இந்தப் பாதிப்பு ஆரம்பத்தில் டயாபடீஸ்காரர்களுக்கு உணரமுடியாமல் இருந்தாலும்
'காலை'யே கட் பண்ணி எடுக்கக்கூடிய அளவுக்கு கொண்டுபோய் விட்டுவிடும். எனவே, டயாபடீஸ்காரர்கள் அவரவர்களுக்கு மருத்துவர் வழங்கிய ஆலோசனையின்படி உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. எனவேதான் டயாபடீஸ்காரர்கள் சிறிய புண்ணோ காயங்களோ ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

No comments:

Post a Comment