கடி...கடி...ஜோக்.


டீச்சர்: உன்னோட பேர் என்னமா? பெண்: சுந்தரி டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க? பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க.. டீச்சர்: அவ்வ்வ்வவ்வ்வ்..
கண்டக்டர்: எங்க போகணும்? டெரர்: அந்த பிங்க் கலர் சுடிதார்கிட்ட. கொஞ்சம் வழி விடுங்க.ஆதரவாளர்: தலைவரே! எப்போது பார்த்தாலும் மரத்து மேலே ஏறி இருக்கிறாரே.. யார் அவர்? தலைவர்: அவர் நம்ம 'கிளை மேலாளர்'."யாருப்பா அந்த ஜோடி, ரெண்டு மணி நேரமா ஒரே இளநீரைக் குடிச்சுக்கிட்டு இருக்காங்க?" விளம்பரத்துக்காக அந்த கடைக்காரன் அவங்களை காசு கொடுத்து அப்பிடி நிக்க வைச்சிருக்கான்ப்பா"


பெற்றோருக்கு பயந்து காதலை விட்ட காலம்போய்... இப்போது பெட்ரோலுக்கு பயந்து காதலை விடுகிறார்கள் இளைஞர்கள்...!!"

"சாப்பிட்டு முடிச்சுட்டீங்களா, பில் போடலாமா?" "வேண்டாம், கிரைண்டர்ல அரிசிய போடுங்க...."

"கபாலி உன்னை போலீஸ் தேடுது" "நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே" "அதான், ஏன் பண்ணலேன்னு கேட்க தேடுது"

"அன்பே, என்னை மட்டும் பிடிக்கலேனு சொல்லிடாதே... ப்ளீஸ்." "சரி, உன் குடும்பமே பிடிக்கல"

"சார், இவன் கார்ல ஓவர் ஸ்பீட் போனான்.." நீங்க, எப்பிடி மடக்கினீங்க?" "சைக்கிள்ல போய்"

"என் டேபிளுக்கு வந்தவன் மகா கஞ்சனாக இருப்பான் போலிருக்கு..." "எப்பிடி சொல்றே?" "தட்டில் டிப்ஸிற்கு பணத்திற்கு பதிலாக பாதி இட்லிய வச்சுட்டு டிப்ஸா வச்சுக்கன்னு சொல்லிட்டு போறான்."

"உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?" "தெரியல....." "பல் டாக்டருக்கு தான்." "எப்படி?" "அவர் தான் எல்லோர் 'சொத்தை'யும் பிடுங்கறாரே."

"என் கைவசம் 7 சீரியல் இருக்கு." "நடிக்கிறீங்களா?' "இல்ல..தினமும் பாக்குறேன்"

"காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன்?" "ஏன்?" "காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சாச்சே.."

"அந்தக் கல்யாணத்துல ரொம்ப 'ஈ' மொய்க்குது, ஏன்?" "ஏன்?" "அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்.."

"என்ன டாக்டர் ஆபரேஷனுக்கு ஃபீஸ் வாங்கமாட்டீங்களா..?" "ஆமாம். செய்கூலி இல்லை, ஆனா, சேதாரம் உண்டு!"

டிராபிக் போலீஸ்: ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே? நபர்: எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?

அவர்: எங்கிட்ட எவ்ளோ பெரிய்ய்ய நிலம் இருக்கிறது தெரியுமா? காலையில் கிழக்கு பக்க எல்லையிலிருந்து காரில் கிளம்பினால் மாலையாகிவிடும் மேற்கு பக்க எல்லையை அடைய! நண்பர்: என்னிடம்கூட கொஞ்ச நாளைக்கு முன்னாடி அது மாதிரி ஒரு கார் இருந்தது!

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு தூக்கிட்டீங்க? ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க 'டிபன் ரெடியா?'ன்னு கேட்டா 'நேத்தே ரெடி'ங்கறான்!

பயணி: தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க. கண்டக்டர்: இன்னொரு டிக்கெட் யாருக்கு? பயணி: ரெண்டுமே எனக்குத்தான். ஒண்ணு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே. கண்டக்டர்: அதுவும் தொலைஞ்சி போச்சுனா? பயணி: ஒண்ணும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.

அண்ணன்: ரூமை மூடிக்கிட்டு ஏன் மருந்து சாப்பிட்டாய்? தம்பி: டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.கணவன்: என்னடி சர்க்கரை பொங்கல் வெள்ளையா இருக்கு? மனைவி: பொங்கல்ல சர்க்கரை போட்டிருக்கேன்...!

"என்னதான் அதி நவீன பிரஸ் நடத்துபவரா இருந்தாலும், அவரால 'அச்சு' வெல்லம் போட்டுதான் பொங்கல் செய்ய முடியும். 'ஆப்செட்' வெல்லாம் போட்டு செய்ய முடியாது!"

"என்னதான் 'மண்டை' வெல்லம்னாலும், அதை உடைச்சு பார்த்தா உள்ளே மூளை இருக்காது!"

"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே." "நான் என்ன சாதிச்சேன்?" "பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே!"

"அந்த அலுவலகத்திலே.. எல்லோரும் தலையை விரிச்சுப் போட்டுட்டு இருக்காங்களே.. ஏன்?" "அங்க லஞ்சம் கொடுத்தா தான் எதுவும் நடக்குமாம்.." "அதை 'சிம்பாலிக்'கா உணர்த்தறாங்களாம்.. லஞ்சம் தலை விரிச்சு ஆடுதுன்னு"

No comments:

Post a Comment