டுவிட்டரில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷல் !

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷலும் டுவிட்டரில் சேர்ந்துள்ளார்.

உலகப் பிரபலங்களில் பெரும்பாலானோர் சமூக வளைதளங்களான பேஸ்புக், டுவிட்டரில் உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷலும் டுவிட்டரில் சேர்ந்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் டுவிட்டரில் சேர்ந்த சில மணி நேரத்திலேயே சுமார் 1 லட்சம் ஆதரவாளர்கள் சேர்ந்துவிட்டனர்.

மிஷலின் முதல் டுவீட், என்னை டுவிட்டருக்கு வரவேற்றவர்களுக்கு மிக்க நன்றி. எம்.ஒ. அதாவது மிஷல் ஒபாமாவின் முதல் எழுத்துக்கள். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் டுவிட்டரில் பிஒ என்று தான் குறிப்பிடுவார். அதாவது பாரக் ஒபாமாவின் முதல் எழுத்துக்கள்.

மிஷல் தனது டுவிட்டர் அக்கௌண்ட் மூலம் அதிபர் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் ஒபாமாவுக்கு டுவிட்டரில் 11 மில்லியனுக்கும் அதிகமான ஆதரவாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment