ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பு !

டெல்லி : வெளிநாட்டவர் நேரடியாக இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் என்ற மத்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பை தொடர்ந்து, ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மொத்தப் பங்கு மூலதனத்தில், ஐந்து சதவிகிதம் வரை, ஒரு வெளிநாட்டவர் முதலீடு செய்யலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு ஈடான இந்திய ரூபாயின் மதிப்பு 54 ஆக கடந்த டிசம்பர் மாத மத்தியில் குறைந்தது. எனவே, மீண்டும் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்க,

தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக இந்திய பங்குச்சந்டிதயில் ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மொத்தப் பங்கு மூலதனத்தில், ஐந்து சதவிகிதம் வரை, ஒரு வெளிநாட்டவர் முதலீடு செய்யலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை முதலீட்டாளர்கள், டீமேட் கணக்கு வழங்கும் செபியால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் பங்கு வர்த்தகம் தொடர்பான நபர்கள் மூலம், தகுதியுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். ஒரு வெளிநாட்டவரிடமிருந்து வரும் பணத்தை, ஐந்து நாட்களுக்குள் பங்குகளில் முதலீடு செய்யத் தவறினால், மீண்டும் அந்த வெளிநாட்டவரின் வங்கிக் கணக்குக்கு, அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2010 ல் வெளிநாட்டவரின் பணம் 2700 கோடி ரூபாய் அளவுக்கு, இந்தியாவை விட்டு வெளியேறியது. இதன் தாக்கத்தினால், அமெரிக்க டாலருக்கு ஈடான இந்திய ரூபாயின் மதிப்பு 54 என்னும் அளவுக்கு, டிசம்பர் மாத மத்தியில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment