ஏர் இந்தியா விமானங்கள் கேன்சல் ?

டெல்லி: ஏர் இந்தியாவில் பணிபுரியும் 12க்கும் மேற்பட்ட விமானிகள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டதை அடுத்து சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு இயக்க இருந்த உள்நாட்டு விமானங்கள் கேன்சல் செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரியும், ஊழியர்களுக்கும், அந்நிறுவனத்தின் நிர்வாகத்திற்கும் இடையே புகைச்சல்

உருவாகியுள்ளது. ஊதியம் அளிப்பதில் உருவான பிரச்சினையை அடுத்து சனிக்கிழமை காலை அந்தநிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 12 பேர் விடுப்பு எடுத்துக்கொண்டனர். இதனால் விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

விமானங்கள் கேன்சல்

இதனையடுத்து நாக்பூர், சென்னை, லெக், பெங்களூரு, அமிர்தசரஸ், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் கேன்சல் செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகாலையில் இயங்கும் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

பண்டிகை நேரமாகையால் பயணிகள் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர்.

No comments:

Post a Comment